சென்னை,ஏப்.15- ஒவ்வொரு மாதமும் திரு வண்ணாமலை கோவிலில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லக்கூடியவர்களுக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து கள் இயக்கப்படும். சித்ரா பவுர்ணமி தினமான சனிக்கிழமை (ஏப்.16) லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்லக்கூடும் என்பதால் அதனை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து சுமார் 1000 சிறப்பு பேருந்துக ள்திருவண்ணா மலைக்கு இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், வேலூர், ஆற்காடு, ஆரணி, திருப்பத்தூர், பண்ருட்டி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை காலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படும் என்று தெரிவித்தனர். கிரிவலம் சென்ற மக்கள் வீடு திரும்ப வசதியாக ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின் றன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள்இயக்க திட்ட மிட்டு மக்கள் தேவைக்கேற்ப விட முடிவு செய்யப்பட்டுள்ளது.