districts

சாலை விபத்தில் ஒருவர் பலி

சென்னை, மார்ச் 12- காசிமேடு சூரிய நாரா யண தெருவைச் சேர்ந்தவர் மன்னார் (59). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் ஏழுமலை (56)  என்பவருடன் வெள்ளிக் கிழமை இரவு சூரிய நாராயண தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டார் பைக் மன்னார், ஏழுமலை மீது மோதியது. அதன் பின்னர் கட்டுப் பாட்டுக்குள் வராத அந்த  மோட்டார் பைக், சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. இந்த  விபத்தில் மன்னார், ஏழு மலை, மோட்டார் பைக்கை ஓட்டி வந்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த செண்டை மேள கலைஞர் சங்கர் (22) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில் மன்னார் சம்பவ இடத்திலேயே பலியா னார். மீதி இருவரும் மீட்கப் பட்டு, ஸ்டான்லி அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.