districts

img

எண்ணும் - எழுத்தும் புத்தாக்க பயிற்சி

சிதம்பரம், அக். 13- சிதம்பரம் கல்வி மாவட்டம் குமராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆசி ரியர்களுக்கான இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் புத்தகப் பயிற்சி வகுப்பு தேரடி தெருவில் உள்ள வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி யில் நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடை பெற்ற இந்த பயிற்சியில் முதல் நாளில் தமிழ் பட மும், இரண்டாம் நாளில் ஆங்கில படமும், மூன்றாம் நாள் முடிவில் கணித பாடம் கற்றல் பயிற்சிக்கான செயல்முறை வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசி ரியர்கள் பங்கேற்றனர்.  குமராட்சி வட்டார கல்வி வள மைய அலுவலர்கள் நடராஜன், மோகன், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.  வட்டார வள மேற்பார்வையாளர் இள வரசன் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கலா மற்றும் விரிவு ரையாளர் நிர்மலா தேவி மூன்று நாட்களும் பயிற்சி யில் கலந்து கொண்டு பயிற்சி யின் அடிப்படை தேவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த பயிற்சி நடைபெற அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்த சிதம்பரம் வீனஸ் பள்ளி தாளாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.