districts

நீட் - டினால் மருத்துவத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத பள்ளிகள் ரவிகுமார் எம்பி வேதனை

விழுப்புரம், ஏப். 11- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தி ருக்கும் நீட் தேர்வால் ஆதிதிராடர் நலத்துறை பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்து கல்லூரியில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிகுமார் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தான் ஆதிதிராவிடர், பழங்குடி நலப்பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ஆனால் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இதுகுறித்து  தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு நாட்களில் விளக்கமும் நடவடிக்கை எடுப்பதாகவும்  அரசு தரப்பில் பதில் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  நீட் தேர்வில் வெற்றி பெற்றும் ஒருவருக்குகூட மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த நிலையில், கல்லூரி படிப்புக்கும் ஒன்றிய அரசு நுழைவு தேர்வு கொண்டு வருகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியது வரவேற்க தக்கது. இது தொடரவேண்டும். அப்போதுதான் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதை விடுவித்து, கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.