பொதுப் பணித்துறை கூட்டத்தில் நாகைமாலி கோரிக்கை
நாகப்பட்டினம், ஆக.9- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கான கோரிக் கைகளை முன்வைத்தார். திருச்சி கலையரங்க மண்டபத்தில் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு. அன்பில் மகேஷ் பெய்யா மொழி. சிவ.மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகளுக்கான கோரிக்கை களை முன்வைத்து நாகைமாலி எம்எல்ஏ பேசி னார். நீண்ட காலமாக நாகப்பட்டினம் முதல் கீழ்வேளூர் வழியாக தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலை யில் உள்ளது. இச்சாலையை அனைத்து தரப்பு மக்களும் அனுதினமும் பயன்ப டுத்துகின்றனர். மிக முக்கியமாக, நாகப் பட்டினம் அரசு மருத்துவமனையிலிருந்து திரு வாரூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் 108 ஆம்புலன்ஸ் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் நோயாளிகளும் அவரை சார்ந்த வர்களும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். எனவே மக்கள் சிரமமின்றி பயன்ப டுத்தும் வகையில் அங்கு புதிதாக நான்கு வழிச் சாலையை உடனடியாக அமைத்து தர வேண்டும். கீழ்வேளூர் பேரூராட்சியில் பல்வேறு வசதிகளுடன் எல்லா வயதினரும் பயன்ப டுத்தும் வகையில் பொது நூலக கட்டிடம் ஒன்றை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.