districts

img

நாகை மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை நாகைமாலி எம்எல்ஏ ஆய்வு

நாகப்பட்டினம், ஜூலை 4- நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றியம் ஒரத்தூர் ஊராட் சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆய்வு செய்தார். விவசாயிகளும் தொழிலா ளர்களும் அதிகமாக வசிக்கும் மாவட்டம் நாகப்பட்டினம். இங்கு கிராமங்கள் அதிகமாக இருக்கி றது. மருத்துவ வசதி தேடி நாகை தலைமை மருத்துவமனைக்கு வந்தால் நோயாகளை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு திருப்பி விடும் போக்கு இருந்து வந்தது.

நாகப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவ கல்லூரி கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் மருத்துவ மணை வளாகத்துடண்  ரூ.366 கோடி திட்டசெலவில் கட்டப்பட்டு வருகிறது. இம் மருத் துவமனை கட்டப்பட்டு செயல் பாட்டுக்கு வந்தால் கிராமப்புற மக்களுக்கு எளிய முறையில் மருத்துவ வசதிகள் கிடைக்கும். இம்மருத்துவ கல்லூரி வளா கத்தில், மருத்துவமனை, குடி யிருப்பு வளாகம்.மருத்துவ கல் லூரி நிர்வாக வளாகம். கல்லூரி வளாகம் என கட்டப்பட்டு வரு கிறது. இப்பணிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆய்வு செய்தார். கட்டு மான பணிகளை விரைந்து முடிக் குமாறு உத்தரவிட்டார். முன்னதாக கட்டுமான பணி களில் ஈடுபட்டு வரும் தொழிலா ளர்களுக்கு கொரோனா தடுப் பூசி போடுவதற்கு முகாமை நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியையும் பார்வை யிட்டார்.