நாகப்பட்டினம், செப். 5 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் மூன்று மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு நாகைமாலி எம்எல்ஏ துவக்கிவைத்தார். தேவூர் பகுதியில் நிலவும் மின் தட்டுப் பாட்டை போக்கவும், பொது மக்களுக்கு சரி விகித அளவில் மின்சாரம் கிடைக்கவும் அந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக் கைகளை ஏற்று, தேவூர் ஊராட்சி, கீழ இரட்டை மதகடி மற்றும் காந்தி தெரு பகுதி, காக்கழனி ஊராட்சி மேல இரட்டை மதகடி பகுதி என மூன்று மின்மாற்றிகளை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி திறந்து வைத்தார். இதில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.