சென்னை, ஜூலை 11-
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் 99 ஏக்கர் நிலத்தில் திரைப்பட நகரம் உருவாக உள்ளது.
அங்கு ஏற்கெனவே இரண்டு பிரமாண்ட படப் பிடிப்பு தளம் தயாராகி, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தொடர்ந்து சினிமா, சின்னத்திரை நடிகர்கள், தொழிலா ளர்களுக்கு குடியிருப்பு கட்டப்பட உள்ளதால் அந்த பகுதிகளை தமிழக கலை, பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக மாமல்ல புரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கல்,உலோகம், மரம், மெழுகு, பெயிண்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் பயிற்சி கூடங் களை பார்வையிட்டு, கட்டிட வசதி, ஆசிரியர் பற்றாக் குறை, விடுதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, கலை, பண்பாட்டுத்துறை ஆணை யர் சுகந்தி, திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கல்லூரி முதல்வர் ராமன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.