districts

img

முத்தியால்பேட்டையில் மாதர் சங்கம் பிரச்சாரம்

புதுச்சேரி, மார்ச் 29- பெண்களின் பாதுகாப்புக்காக போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சரவணனுக்கு  மாதர்கள் தீவிர வாக்கு சேகரித்தனர். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சரவணனுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் வாக்கு சேகரித்தனர். முத்தியால்பேட்டை மணிக்கூண்டு எதிரில்  இருந்து துவங்கிய வாக்கு சேகரிப்பு பிரச் சாரத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் சந்திரா  தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில  இந்திய துணைத் தலைவர் சுதா, பிரதேச  செயலாளர் சத்யா, பொருளாளர் இளவரசி  உள்ளிட்ட ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி கள்  இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்று  அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் நடைபெற்ற பிரச் சாரத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.