போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
முசிறி, ஏப்.23- இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடு த்த நபர் 50 நாட்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளார். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கொடுத்த புகார் மனு குறித்து செய்தி வெளிவந்த அன்றே திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மயில்வாகனன், முசிறி துணை கண்காணிப்பாளர் பிரம்மானந்தம் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்த னர். முசிறி பெரியார் நகரைச் சேர்ந்தவர் டீ மாஸ்டர் சிங்கா ரம் (55). இவர் 7 வயது மற்றும் 13 வயது சிறுமிகளுக்கு மார்ச் 7 ஆம் தேதியன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் தாய் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மார்ச் 24 அன்று 7 வயது சிறுமி மட்டும் பாதிக்கப்பட்டதாக போக்சோ வழக்கு பதிந்தனர். ஆனால் சிங்காரம் கைதாகா மல் தொடர்ந்து 50 நாட் களுக்கு மேலாக தலைமறை வாக இருந்தார்.
இந்நிலையில் சிங்காரம் மகன் போலீசாக வேலை பார்ப்பதால், சிங்காரத்தை போலீசார் கைது செய்யாமல் இருப்பதாகவும், மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுமி களில் ஒரு சிறுமி மட்டுமே பாதிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என்றும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மல்லிகா தலை மையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செய லாளர் டி.பி.நல்லுசாமி, மாதர் சங்க நிர்வாகிகள் லிங்க ராணி, விஜயலட்சுமி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் முசிறி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இத்தகவலறிந்த எஸ்.பி. மயில்வாகனன் தனிப்படை போலீசாருக்கு டீ மாஸ்டர் சிங்காரத்தை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யு மாறு உத்தரவிட்டார். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. தலையிட்டவுடன், தனது தந்தையை மறைத்து வைத்திருந்த மகன், ‘எங்கே நமது வேலை பறி போய் விடுமோ’ என்ற பயத்தில், தாமாக முன் வந்து முசிறி காவல்துறையிடம் சிங்கா ரத்தை ஒப்படைத்ததாக தெரி கிறது. ஆயினும் முசிறி போலீசார் வாகன தணிக்கை யில் ஈடுபட்டபோது சிங்கா ரத்தை மடக்கி பிடித்ததாக கூறுகின்றனர். அதன் பின் சிங்காரத்தி டம் விசாரணை நடத்திய காவல்துறையினர், 13 வயது சிறுமியிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டதாக தெரி வித்தனர். அதன் அடிப்படை யில் மேலும் ஒரு போக்சோ சட்டப்பிரிவின் கீழ் ஏப்.22 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.