செய்யூர், பிப்.13- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்க ளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறை யாக வழங்க வலியுறுத்தி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழு வின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பு கடந்த வாரம் கஞ்சி காய்ச்சி, காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. இதில், 2024-25ம் ஆண்டில் நூறுநாள் வேலை வாய்ப்பு தொடர்ந்து மற்றும் உடனே வழங்க வேண்டும். மேலும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த தொழி லாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், 200 நாள்வேலை வாய்ப்பு, ரூ.600 கூலி வழங்க வேண்டும், நூறு நாள் வேலை வாய்ப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சு நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் பிப்.12ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை வழங்கப்படும் என அறிவித்ததின் அடிப்படையில் காத்தி ருக்கும் போராட்டம் தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொளத்தூர் பகுதி மக்கள் சிபிஎம் தலைமையில் வியாழ னன்று (பிப்.13) சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தியை முற்று கையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை நடைபெற்ற போராட்ட த்தில் சிபிஎம் செய்யூர் வட்ட செய லாளர் க.புருஷோத்தமன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, எம்.வல்லிக் கண்ணன், வட்டக் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, முகுந்தன், ஜானகி, கிளை செயலாளர்கள் சுதா, ரேவதி, தவிச வட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காத்திருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.