districts

சுடுகாட்டை சுற்றி ஏரி தண்ணீர்- மூதாட்டியின் உடலை புதைக்க முடியாமல் கிராம மக்கள் தவிப்பு

ஆவடி,ஜன.31- வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி பேபிகுமாரி என்பவர் உடல் நலக்குறைவால் 29-ந் தேதி காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் கிராம மக்கள் தவித்தனர். ஆவடி அருகே உள்ளது வெள்ளானூர் கிராமம். இங்கு வசிப்பவர்கள் இறந் தால் அவர்களது உடல்,  அருகே உள்ள ஏரிக்கரை யோரத்தில் புதைக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரி முழு வதும் தண்ணீர் சூழ்ந்துள் ளது. இதனால் இறந்தவர்க ளின் உடல்களை மீஞ்சூர்  வெளிவட்ட சாலையோரத் தில் எரித்து வந்தனர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரி வித்து அங்கு உடல்களை எரிக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி பேபி குமாரி என்பவர் உடல் நலக்குறைவால் 29-ந் தேதி காலை இறந்து போனார்.

இதையடுத்து அவரது உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் கிராம மக்கள் தவித்தனர். அருகே உள்ள மற்றொரு சுடுகாட்டில் உடலை புதைக்க ஏற்பாடு செய்த போது இதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேபிகுமாரியின் உடலை என்ன செய்ய என்று  தெரியாமல் 30 மணி நேரத் திற்கும் மேலாக தவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீசுக்கு புகார் தெரிவிக் கப்பட்டது. அவரது உத்தரவு படி ஆவடி வட்டாட்சியர், காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி,  வருவாய் துறை அதிகாரிகள் உடனடி யாக வெள்ளனூர் கிராமத் திற்கு விரைந்து வந்தனர். அப்போது இறந்தவர்க ளின் உடலை புதைக்க நிரந்தர மாக சுடுகாட்டு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நில அளவையர் உடனடியாக வரவழைக்கப்பட்டு ஏரிக்கு அருகே சுடுகாடு நிலம் அளந்து கொடுக்கப்பட்டது.இதன் பின்னர் அங்கேயே பேபி குமாரியின் உடல் புதைக்கப்பட்டது.