districts

img

பூங்கா அமைப்பதற்காக குடியிருப்புகளை அகற்றக் கூடாது மண்டல அதிகாரியிடம் சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, பிப். 13- சென்னை தண்டையார்பேட்டை 38ஆவது வட்டத்தில் உள்ள ரயில்வே நிலத்தில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தி விட்டு பூங்கா, வாகன நிறுத்தம், மார்க்கெட் அமைக்கப் போகி றோம் என்ற சென்னை மாநகராட்சியின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே. நகர் பகுதிக்குழு சார்பில் 4ஆவது மண்டல அலுவலர் ஜி.சரவணமூர்த்தியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகந்தான், அ.விஜயகுமார், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், பா.விமலா எம்சி,  ஷாஜகான், கார்த்திக், திருமுருகன், கதிர், அலெக்ஸ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு துணையாக இருப்போம் என தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தற்போது மண்டல அதிகாரியை சந்தித்து குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு பூங்கா அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். மண்டல அதிகாரியும் மேலதிகாரிகளுடன் ஆலோசித்து பொதுமக்களை அப்புறப்படுத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.