சிதம்பரம், டிச.22- சிதம்பரம் அருகே சி.முட்லூரில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மாற்றிஅமைப்பதாக கூறி, இந்த திட்டத்தையே ஒழித்துக் கட்டும் வகையில், வி.பி ஜி ராம் ஜி என்ற திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 24ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மனோகரன், முத்து பெருமாள், கலையரசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார் விசிக ஒன்றிய செயலாளர்கள் சந்தானகுமார், வேல்முருகன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி ஜெயக்குமார், வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் சண்முகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
