districts

img

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புக ஓய்வு பெற்றோர்அமைப்பின் மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூலை 7-

     தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மேற்கு கிளை 14ஆவது மாநாடு அம்பத்தூரில் தோழர் வி.பி.சிந்தன்  நினைவரங்கில் வெள்ளியன்று (ஜூலை 7) நடைபெற்றது. கிளைத் தலைவர் என்.அச்சுதன் தலைமை தாங்கினார்.

         சங்க கொடியை இ.ராமகிருஷ்ணன் ஏற்றினார். பி.எஸ்.பார்த்த சாரதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

    சென்னை வடக்கு மண்டலச் செயலாளர் எஸ்.கணேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளைச் செயலாளர் டி.கே.சம்பத் ராவ் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

    மாநில துணைத் தலைவர்கள்  கே.ஆர்.முத்துசாமி, என்.தீரமணி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் எம்.தன லட்சுமி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன், செய லாளர் எஸ்.எஸ்.கணேஷ் ராவ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.ராமநாதன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

 தீர்மானங்கள்

    மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்சார சட்டம் 2023ஐ வாபஸ்பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

     தலைவராக என்.அச்சுதன், செயலாள ராக டி.கே.சம்பத்ராவ், பொருளாளராக எஸ்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 21 பேர் தேர்வு  செய்யப்பட்டனர்.