ராணிப்பேட்டை,ஜன. 31 ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா கீழ் வீராணம் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்டீல்ஸ் என்ற இரும்பு உருக்கும் தனி யார் நிறுவனத்தில் 20 வெளிமாநில தொழி லாளர்களை உரிய ஊதியம், நிவாரணம் வழங்காமல் ஒரு அறையில் பூட்டி அடைத்துள்ளனர். இது தொடர்பாக வெளி மாநில ஒப்பந்ததாரர் நரசிம்மன் என்பவரை நேரில் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் பேசினர். கடந்த மாதம் டிசம்பரில் நரசிம்மன் என்ப வர் மூலம் வெளி மாநி லத்தை சேர்ந்த 30 தொழிலாளர்களை இரும்பு உருக்கி கம்பி தயாரிக்கும் நிறுவனம், வாய்மொழி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிய மர்த்தியுள்ளது. அவர்கள் ஒடிசா, பீகார், மைசூரை போன்ற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள். தற்போது தொழிற்சாலையில் உற்பத்தி இல்லை ஆகவே மிகக்குறைந்த ஊதி யத்திற்கு பணி செய்யும் படி நிர்வாகம் கட்டாய படுத்தி யுள்ளது. இதை மறுத்ததால் 20 தொழிலாளர்களை மிரட்டி ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொழி லாளர்கள் அப்பகுதியினரி டம் உதவி கேட்டும் பய னில்லை மீதம் இருந்த தொழிலாளர்கள் தெரு வில் தங்கியுள்ளனர்.
இந்நிலை யில் உதவியின்றி தவித்த தொழிலாளர்களை சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், செயலாளர் அ. தவராஜ், பொருளாளர் என். ரமேஷ், ஆட்டோ பாபு ஆகியோர் ஞாயிறன்று (ஜன.29) அவர்கள் அடைத்துவைக்கப்பட்டி ருந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக பாணாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் சேட்டு நிறுவனர் ராஜேஷ், தொழிற்சங்க தலை வர்களுடன் பேச்சு நடத்தி னார். அதில் வேலை இருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ400, வேலை செய்யாத நாள் ஒன்றுக்கு ரூ100 வழங்க வேண்டும் என்ற அடிப்படை யில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. தொழி லாளர்களுக்கு ரூ 2 லட்சம் கொடுப்பதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதில் முன்பணம் போக மீதி தொகையை பிப்ரவரி 16 ஆம் தேதி அளிப்ப தாக நிறுவனம் ஒப்புக் கொண்டது. கடந்த நான்கு நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனை சிஐடியு தலையீட்டால் முடிவுக்கு வந்தது என தொழிலாளர்கள் பாராட்டி னர்.