districts

img

சென்னையில் வீட்டு வாடகை உயர்ந்தது

சென்னை, செப். 23- கிராமப் புறங்களில் போது மான வேலை வாய்ப்பு இல்லாத தால் நகரங்களை நோக்கி படை யெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் வேலைக்காக சென்னையில் குவிந்தவண்ணம் உள்ளனர். டீக்கடை உள்பட பெரிய  நிறுவனங்கள் வரை வடமாநில இளைஞர்கள் அதிகளவு வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த வர்களும் சென்னையில் குடும்பத்து டன் வசித்து வருவதால் வீடுகளின் தேவையும் அதிகரித்து விட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கிராமங்கள் போல இருந்த பகுதிகள் அனைத் தும் தற்போது மிக பிரமாண்டமான அளவு பெரு நகரமாக உருவெ டுத்து விட்டது. பெரிய பெரிய அடுக்குமாடி குடி யிருப்புகள் உருவாகினாலும் கூட பெருகி வரும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிய வில்லை. அதுவும் பொதுமக்கள் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்ட தால் அதற்கேற்ற வகையில் குடியிருப்புகள் உருவாகி வருகிறது. இதன் காரணமாக சென்னையில் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு கிடைப்பது என்பது குதிரை  கொம்பாகி விட்டது. அதற்கேற்ப வீட்டு வாடகையும் ஆண்டுக்காண்டு உயர்ந்தபடி உள்ளது. இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்து விட்டதால் சென்னையில் வீட்டு உரிமையாளர்களும் வீட்டிற் கான மாத வாடகையை உயர்த்தி  விட்டனர். இதற்கு உடன்படதாவர் களை வீட்டை காலி செய்யுமாறு கூறுகின்றனர்.

இதனால் குறிப்பாக நடுத்தர மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரு கின்றனர். சென்னையின் இதயம் போன்ற பகுதியாக விளங்கும் அண்ணாநகர் போன்று வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் சொகுசு பங்களாக்களின் வாடகை கடுமையாக அதிகரித்து விட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அண்ணாநகரில் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட சொகுசு பங்களா  வின் மாத வாடகை 56 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது இந்த  ஆண்டு 13 சதவீதம் உயர்ந்து 63 ஆயி ரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கோட்டூர்புரத்தில் 2 ஆண்டு களுக்கு முன்பு 74 ஆயிரம் ரூபாயாக  இருந்த சொகுசு வீடுகளின் சராசரி மாத வாடகை 14 விழுக்காடு உயர்ந்து தற்போது 84 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதே போல் சென்னையின் முக்கிய பகுதிகளிலும் வாடகை கட்டணம் உயர்ந்து விட்டது. சென்னையை போல தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களிலும் சொகுசு பங்களாக்களின் வாடகை 8 முதல் 18 சதவீதம் உயர்ந்துள்ளதாக மனை  வணிகத்துறை ஆய்வு நிறுவனமான அனரோக் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரமாக திகழ்ந்து வரும்  மும்பை ஒர்லியில் 2020ஆம் ஆண்டு  2 ஆயிரம் சதுரஅடி கொண்ட ஆடம்பர வீடுகளின் மாத வாடகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 2.35 லட்சம் வரை அதிகரித்து விட்டது.  மும்பை டார்டியோவில் 15 சதவீதம்  வாடகை உயர்ந்துள்ளது.

இந்த பகுதியில் இருக்கும் சொகுசு பங்களா மாத வாடகை ரூ.2.7 லட்சத்தில் இருந்து ரூ.3.1 லட்சமாக  உயர்ந்து விட்டது. பெங்களூர் ஜே,பி.நகரில் ரூ.46 ஆயிரமாக இருந்த மாத வாடகை இந்த ஆண்டு  13 சதவீதம் அதிகரித்து ரூ.52 ஆயிர மாகவும். பெங்களூர் ராஜாஜி நகரில் ரூ. 56 ஆயிரமாக இருந்த சொகுசு வீடுகளின் சராசரி மாத வாடகை 16 சதவீதம் அதிகரித்து ரூ.65 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் வீட்டு வாடகை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பிரசித்தி பெற்ற ஜூபிலி `ஹில்ஸ் பகுதியில் சராசரி மாத வாடகை ரூ.62 ஆயிரமாகவும் மேற்கு வங்க  மாநிலம் கொல்கத்தா அலிபூரில் ரூ. 60 ஆயிரமாக இருந்த வாடகை தற்போது ரூ. 65 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. தில்லி கோல்ப் கோர்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு களின் வாடகை 11 சதவீதம் அதிக ரித்து ரூ. 78 ஆயிரமாகி விட்டது. கோல்ப் கோர்ஸ் விரிவாக்க சாலை யில் மாத வாடகை ரூ.56 ஆயிரமாக  அதிகரித்துள்ளதாக அனரோக் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.