சென்னை, மார்ச் 6 - மாநில அரசுக்கு, ஒன்றிய அரசு தர வேண்டிய பாக்கிகளைவழங்கக் கோரி என்றாவது அண்ணாமலை குரல் கொடுத்தது உண்டா? என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் தோழமை கட்சித் தலை வர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் சக்தி யாக முதலமைச்சர் உள்ளார். மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்கும் பணிக்கான முன்னெடுப்பு களை முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கே. பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வகை களில் கொடுக்க வேண்டிய நிலுவையை தர மறுக்கிறது. மாநிலத்திற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய பாக்கிகளை என்றாவது பாஜக தலை வர் அண்ணாமலை கேட்டது உண்டா? ஒன்றிய அரசும் மக்களுக்கு நல்லது செய்ய மறுக்கிறது. மாநில அரசுக்கு நிதியை தர மறுக்கிறது. நிதியை கொடுக்காமல் கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சியில் தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சுயமாக செயல்பட முடியவில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார். 3 மாநில தேர்தல் முடிந்ததும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி விட்டார்கள். இத்தகைய மக்கள் விரோதமாக நட வடிக்கைகளை திசை திருப்ப இந்து மதத்தை பயன்படுத்துகின்றனர். மதவெறி அரசியலுக்கு எதிரானது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. ஒன்றிய அரசு, இந்திய பொருளாதாரத்தை கபளீகரம் செய்து வரு கிறது. முறைகேடுகள் அம்பல மானதும் அதானியின் சொத்து 17 லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்துள்ளது. இவை அனைத்தும் மக்கள் பணம். அது குறித்து பிரதமர் வாய் திறந்தாரா? செபி ஏன் தலை யிடவில்லை? பொதுத் துறை களை கூறு போட்டு விற்கிறார்கள்கள்; விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பொதுத் துறைகளை விற்றுவிட்டால் இட ஒதுக்கீட்டை எப்படி பாதுகாக்க முடியும்? எனவே, மதவாதத்தையும், கார்ப்ரேட்களின் நலனையும் பாதுகாக்கும் பாஜக ஆட்சியை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசி னார். கூட்டத்திற்கு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.