உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் தங்கியிருக்கும் போதுஎ.வ.வேலுவின் விருந்தினர் மாளிகையில் ரெய்டு நடத்தப்படுகிறது. மகள் செந்தாமரை வீடு உள்ளிட்ட 16 இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.
வருமான வரிச் சோதனையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் அல்லது ஸ்டாலின் பெயருக்கு ஒரு இழிவை ஏற்படுத்தலாம்; அவப்பெயரை உண்டாக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. பாஜக-அதிமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவதை தெரிந்து கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளில் இந்த வருமான வரி ரெய்டும் ஒன்று.
நாங்கள் வாக்காளர்களுக்கு பணம்தருவதில்லை. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். ஒரு ஊருக்கு இரண்டு முறை பணம்தருகிறார்கள். தேர்தல் ஆணையம் அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் வீடுகளில் ரெய்டு நடத்துவதன் மூலம் தேர்தல் பணிகளை முடக்கமுயற்சிக்கிறது மத்திய அரசு. திண்டுக்கல் தொகுதியில் அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாக்காளர்கள் அதனை முறியடித்து சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டியை வெற்றி பெறச்செய்வார்கள். திமுக கூட்டணி கட்சியினர் தாங்களே வேட்பாளர்களாக நிற்பதுபோல பணியாற்றுகிறார்கள். திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் திண்டுக்கல் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்வது எங்கள் வெற்றியை உறுதி செய்யத்தான்.
விசாரணைக் கூண்டில் அமைச்சர் சீனிவாசன்
அதிமுக ஊழல் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அந்த வகையில் விசாரணை கமிஷன் கூண்டில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சீனிவாசன் வழக்கை முதல் வழக்காக ஏற்று நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவோம். திமுக ஏற்கனவே தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை?
தேர்தல் நடைபெற ஒன்று, இரண்டு நாட்களே உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இருப்பது போலவே தெரியவில்லை. எதிர்க்கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள் வருமான வரித் துறையினர். ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்தவில்லை? ஏன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை? ஏன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வீடுகளில் நடத்தவில்லை? எங்கோ உள்ள அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். பெயரளவிற்கு அதைச் செய்கிறார்கள். மத்தியில் பாஜக அரசு இருக்கிற வரை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எந்த ஒரு ஆணையமும் நடுநிலையோடு இருக்க முடியாது. சிபிஐ வருமான வரித்துறை என எந்தத் துறையாக இருந்தாலும் நடுநிலையோடு செயல்பட முடியாது. ஏன் நீதிமன்றம் கூடசுயேச்சையாக செயல்பட முடியாது. எல்லாத் துறையையும் பாஜக ஆட்டுவிக்கிறது. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு நாடாளுமன்ற பதவி தருகிறார்கள், ஆளுநர் பதவி தருகிறார்கள் என்றால் அந்த நீதிமன்றம் எப்படி நியாயமாக செயல்படும். இது தான் பாஜக ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் லட்சணம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டி, முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன்,வீ.மாரியப்பன், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் ஆகியோர் உடனிருந்தனர். (நநி)