districts

ஐசிஎப் விளையாட்டு மைதானங்கள் கார்ப்பரேட்டிடம் ஒப்படைப்பு: சிஐடியு எதிர்ப்பு

சென்னை, ஜூன் 19- சென்னையில் உள்ள ஐசிஎப் விளையாட்டு ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு மைதானங்களை கார்ப்  பரேட் நிறுவனங்களிடம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என  சிஐடியு மத்திய சென்னை மாவட்டக் குழு வலியுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் எம்.சந்திரன், செயலாளர் சி.திரு வேட்டை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வில்லிவாக்கத்தில் உள்ள ஐசிஎப் விளையாட்டு ஸ்டேடியம் மற்றும் விளையாட்டு மைதானங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக வழங்குவதை சிஐடியு மத்திய சென்னை மாவட்டக் குழு வன்மை யாக கண்டிக்கிறது. இந்திய உழைப்பாளி மக்களால் உருவாக்கப்பட்ட தேசத்தின் பொதுச்  சொத்துக்களான பொதுத்துறை நிறு வனங்களை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு இந்த நிறு வனங்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களையும் கார்பரேட் நிறுவனங்களிடம் வழங்கி  விளையாட்டை வர்த்தக பொருளாக மாற்றுகிறது.

18.5.2021 அன்று ரயில்வே மற்றும் ஐசிஎப் நிர்வாகத்தின் கீழ்உள்ள விளையாட்டு ஸ்டேடியங்கள் உள்ளிட்டு 15 ரயில்வே விளை யாட்டு மைதானங்களை கார்பரேட் நிறுவனங்களிடம் வழங்க ஏதுவாக  ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பித் துள்ளது. இந்த விளையாட்டு மைதானங் கள் ஐசிஎப் மற்றும் ரயில்வே ஊழி யர்களின் உழைப்பினால் உரு வாக்கப்பட்டது. இங்குள்ள தடகள பாதைகள், கால்பந்து மைதானம், கிரிகெட் மைதா னம், வாலிபால், கூடைப்பந்து மைதா னம், உள்ளிட்டவை ரயில்வே மற்றும்  ஐசிஎப் ஊழியர்களின் பிள்ளைகள் உள்ளிட்ட வில்லிவாக்கம் சுற்று வாட்டார இளைஞர்களின் பயிற்சி களமாக உள்ளது. தேசிய அளவில் வெற்றிபெற்ற பல விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள். இங்கு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கனக்கான எளிய  குடும்பத்தின் பிள்ளைகள் பல்வேறு  துறைகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா வில் வேலை பெற்று ஓரளவு பாது காப்பான வாழ்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்.

எளிய மக்களின் நலனுக்காக பயன்பட்டு வந்த இந்த விளையாட்டு  மைதானங்களை வர்த்தக நோக்  கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களி டம் மோடி அரசு வழங்குவதால் ஏழை  மற்றும் நடுத்தர குடும்பத்து பிள்ளை கள் இந்த ஸ்டேடியத்துக்குள் நுழைய  முடியாத நிலை உருவாகும். கூடுதல்  கட்டணம் செலுத்த முடிந்த மேல்  தட்டு பிரிவினரே இந்த மைதானத் தில் விளையாட முடியும். இது சமூ கத்தின் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கக் கூடிய பெறும் அநீதியா கும். இதை ஏற்றுக்கொள்ள முடி யாது. தொழிலாளர்களின் உழைப்பி னால் உருவான ஐசிஎப் விளை யாட்டு ஸ்டேடியம் உள்ளிட்ட இந்தி யாவில் உள்ள 15 ரயில்வே விளை யாட்டு மைதானங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் என  மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடி தம் எழுதியுள்ளார். அவருக்கு சிஐ டியு மத்திய சென்னை மாவட்டகுழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. விளையாட்டை சந்தை பொரு ளாக மாற்றும் இந்த முடிவை மோடி  அரசு திரும்பப் பெற வேண்டும் என  வலியுறுத்துகிறோம். இல்லை யென்றால் அந்த முடிவை திரும்பப் பெறும் வரை சிஐடியு தொடர் போராட்  டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.