திருவள்ளூர், அக். 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் வட்ட 24 வது மாநாடு சிறுவானூர் கண்டிகையில் ஞாயிறன்று (அக் 6), நடைபெற்றது. வட்டக் குழு உறுப்பினர்கள் என.நித்தி யானந்தம், எஸ்.பூங்கோதை, கே.முரு கன் ஆகியோர் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஏ.ஆன்றியாஸ் கொடியேற்றியுரையாற்றி னார். வட்டக் குழு உறுப்பினர் டி.ஆனந்தன் வரவேற்றார். வட்டக் குழு உறுப்பினர் எஸ்.கலையரசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பினர் இ.எழிலரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வட்ட குழு உறுப்பி னர் எம்.உதயநிலா நன்றி கூறினார். திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், திருவள்ளூர் நகராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள சீரமைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு தேர்வு 11 பேர் கொண்ட திருவள்ளூர் வட்ட குழுவின் செயலா ளராக எஸ்.கலையரசன் தேர்வு செய்யப்பட்டார்.