சென்னை, ஜன. 25 - பெத்தேல் நகர் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: சென்னை மாநகராட்சி 196வது வட்டத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 30 ஆண்டு களுக்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர். சர்வே எண் 282/1, 282/2, 282/3 ஆகிய வற்றில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப் பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில வகை மாற்றம் செய்து இல வச மனைப்பட்டா வழங்க தமிழக அரசு 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்தப் பகுதியை ஆய்வு செய்த, வனத்துறை, ஐஐடி உள் ளிட்ட அமைப்புகள் பட்டா வழங்க தடையில்லை என தெரிவித்து விட்டது. பசுமைத் தீர்ப்பாயம் சதுப்பு நிலம் இல்லை என தீர்ப்பு அளித் துள்ளது. குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்த அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், குடும்பத்திற்கு 2 சென்ட் நிலம் இலவசமாக வும், அதற்கு மேல் உள்ள நிலத்திற்கு சதுர அடி 500 முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு பட்டா வழங்கலாம் என நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு வழக்கில் நீதிமன்ற அவ மதிப்பு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ஜன.10 அன்று குடியிருப்பு களுக்கு படிவம் 6 விநியோ கிக்கப்பட்டது. இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அளித்த வாக்குறுதி அடிப்படையில் போராட்டம் கைவிடப் பட்டது. இதனைத் தொடர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில், அரசு கொள்கை முடி வெடுத்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதிகாரி கள், நீதிமன்றத்திற்கும் இடையேயான பிரச்சனை யாக விட்டுவிடாமல், தமிழக அரசு பட்டா வழங்க கொள்கை முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மக்களை பதற்றமடையச் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடியிருப் போருக்கு பட்டா வழங்க ஆக்கப்பூர்வமான நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.