நாகர்கோவில், ஜூலை.23- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலையில் இருந்தே கடல் சீற்றமாக வும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இத னால் சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பின. இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவளம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கீழமணக்குடி, மணக்குடி உட்பட பல கடற்கரைக் கிராமங்களிலும் கடல் சீற்ற மாக காணப்பட்டது. இந்த கடற்கரை கிராமங்க ளிலும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலை களால் வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதி வழியிலேயே கரைக்கு திரும்பி வந்தனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் குறைந்த அளவிலான விசைப்படகு கள் மட்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தன. மீன்கள் அதிகளவில் கிடைக்கா ததால் மீன் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. அதிகாலையில் இருந்தே கன்னி யாகுமரியில் மேகமூட்டமாக இருந்ததால் வெள்ளியன்று சூரிய உதயத்தை காண முடியவில்லை. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.