செங்கல்பட்டு, ஜன. 9- தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு கரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது. கடைகள்,உணவகங்கள், திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் 262 க்கும் காவலர்கள் மாவட்ட எல்லைகளில் 7 சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகள் சோனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேவையின்றி வெளியில் வந்தவர்களை எச்சரித்தும் ரூபாய் 200 அபராதம் விதித்தும் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர். அவசர மருத்துவ உதவிக்காக சென்ற வர்கள், மருந்து வாங்க மருத்துவமனைக்கு சென்றவர்களிடம் இருந்து அதற்கு உரிய ஆவணங்கள், மருந்து சீட்டுகள் இருந்தால் மட்டுமே அவர்களை காவலர்கள் அனு மதித்தனர். பெரும்பாலான பகுதிகளில் முக்கிய சாலைகள் அனைத்தும் வாக னங்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான மாமல்லபுரம், வேடந்தங்கல், வண்டலூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை.