செங்கல்பட்டு, ஏப் 25 – வேலை வழங்கவே கடு என்ற முழக்கத் தோடு சென்னையில் தொடங்கிய பிரச்சார பயண குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திங்களன்று (ஏப் 25) காலை செங்கல்பட்டு அடுத்த திருமணியில் துவங்கிய பயணக்குழு விற்கு வாலிபர் சங்கத்தின் திருமணி கிளையின் சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் அம்பேத்கர் சிலை அருகில் சாலையோர கடை வியாபாரிகள் சங்கம், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பசு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், சிஐடியு மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ், சிஐடியு நிர்வாகிகள் கலைச் செல்வி, யோபு ராஜ், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் எம்.அழகேசன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து சாலை கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நிர்வாகி வனிதாமணி தலைமையி லும், படாளம் கூட்டு சாலையில் மாதர் சங்கம், ஆட்டோ சங்கம் சார்பில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கலையரசி தலைமையிலும், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் மாதர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் நிர்வாகி இந்திரா தலைமை யிலும், ஜானகிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிர்வாகி குமரேசன் தலைமையிலும் கருங்குழி பேருராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மசா.முனுசாமி தலைமை யிலும் உற்சாகமாக பழரசம், உணவு பொருட்களை கொடுத்து வரவேற்றனர். அடுத்து மதுராந்தகத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமையில் உற்சாகமாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பாக்கம், ஒழுப்பாக்கம் கிராமத்தில் வாலிபர் சங்க கிளைகள் சார்பில் நிர்வாகி உதயகுமார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சோத்துப்பாக் கத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.