விழுப்புரம், ஜூன் 20- வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 20 க்கும் மேற்பட்டோர் மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்தனர். அப்போது, கண்டமங்கலம், நாவல் மருதூர்,ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நூறுநாள் வேலை கேட்டு ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி கவுரி உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.