districts

img

நெமிலிச்சேரி-தையூர் ஏரிகளில்  குவிந்த வெளிநாட்டு பறவைகள்

மாமல்லபுரம்,பிப்.20- கேளம்பாக்கம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தையூர் ஏரிகளுக்கு வெளிநாடு மற்றும் வட மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான பறவைகள்  இடம் பெயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாதம் 28-ந் தேதி, 29-ந் தேதி  நடைபெற்றது.  சதுப்பு நிலங்கள்,  நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்து வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் மாணவர்கள் கணக்கெடுப்பு செய்தனர். இதில் அதிகபட்சமாக நாகை,  மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரத்து 598 பறவைகள்  இருந்தன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 882 பறவைகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 412 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டு வந்தது.  மொத்தம் 644 இடங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இங்கு மகுடித்தாரா வாத்து, ஆண்டி வாத்து,   ஊசிவால்  வாத்துக்கள் அதிகம் காணப்படுவதாக பறவை  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.