எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) 18ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்பத்தூர் கிளையில் கொடியேற்று நிகழ்ச்சி கவுரவத் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை ஆலோசகர் இரா.துரைசாமி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் ஜிதேந்திரன், அழகர் ராஜ், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, கே.ஜே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.