ஆலந்தூர், மே 4- ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் சாரங்கபாணி (வயது75). வந்தவாசியை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரி இல்லாததாலும் மகன் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக சாரங்க பாணிக்கும், அவ ருடைய மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டின் மாடிப்படிக்கட்டின் கீழ் உள்ள கழிவுநீர் குழாயில் சாரங்க பாணி தூக்கு போட்டு தற் கொலை செய்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.