விழுப்புரம், செப். 14- வானூர் வட்டத்திற்குட்பட்ட எடச்சேரி கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (செப். 14) சாலை மறியல் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட எடச்சேரி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் தங்களது அனைத்து பயன் பாட்டிற்கும் உப்பு தண்ணீரைத்தான் பயன் படுத்தி வருகின்றனர். சுகாதாரமான குடிநீர் கேட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்க ளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ஊராட்சிமன்றத் தலை வர் வேலனிடம் கோரிக்கை வைத்தனர். புதுக்குப்பம் பகுதியிலிருந்து உள்ள ஆழ் துளை கிணற்றிலிருந்து பைப் மூலம் குடி தண்ணீர் கொண்டு வந்தனர். புதுகுப்பம் பகுதியை சேர்ந்த சிலர் அந்த பைப் லைனை உடைத்து விட்டனர். இதனால் எடைச்சேரி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போனது. இதுகுறித்து கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அந்த கிராம மக்கள் சிபிஎம் வானூர் வட்டச் செயலாளர் எம்.கே. முருகன் தலைமையில் கிளியனூர் கடைத் தெருவிலிருந்து ஊர்வலமாக சென்று புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக் கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய முயற்சித்தனர். அப்போது வட்டச் செயலாளர் முருகன் மயங்கி விழுந்தார். பிறகு, காவல்துறையினர் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி குடிதண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இனிமேலும் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு புதுகுப்பம்-எடைச்சேரி கிராம மக்களை அழைத்து சமாதான கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பால முருகன், ஐ.சேகர், கிராம நிர்வாகிகள் கே.நட ராஜன், லலிதா, கோவிந்தசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.