districts

img

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தேவை மாற்றுத்திறனாளிகள் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாடு தீர்மானம்

விழுப்புரம், ஜூலை 8- மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்க வேண்டும் என்று மாறுத்திறனாளி கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 3 ஆவது மாநாடு மாவட்டத் தலைவர் பி.முரு கன் தலைமையில் வெள்ளி யன்று (ஜூலை 8) நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எம்.யுகந்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் வர வேற்றார். சங்க கொடியை ஏற்றி வைத்த மாநில பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் பி.ஜீவா வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையும் பொருளாளர் உமா வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக பி.முரு கன், மாவட்டச் செயலாளராக ஏ.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளராக ஜி.ஜெய்குமார் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுத்திறனாளிகள் குறை கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும், ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்தி தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.