கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாதர் - வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புதனன்று பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாதர் சங்கத்தின் பகுதி செயலாளர் எஸ்.ராதிகா தலைமை தாங்கினார்.இதில் மாவட்டத் தலைவர் கே.ரமா, பொருளாளர் அ.பத்மா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மதன்குமார், செயலாளர் வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.