கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு சிஐடியு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கருப்பையன், மாவட்ட தலைவர் ஆர்.ஆளவந்தார், மாவட்ட பொருளாளர் இ.தயாளன், நிர்வாகிகள் ஆர்.கல்யாணசுந்தரம், ஜே கிருஷ்ணமூர்த்தி, ஜீ.கணேசன், ஆர்.குமார், ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.