திருவொற்றியூர், ஜூலை 26- கொசஸ்தலை ஆறு வெள்ளிவாயல் சாவடி, எடப்பாளையம், மணலிபுதுநகர், சடையங்குப்பம் வழியாக பாய்ந்து அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் அதிகளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. அருகில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து குளிரூட்டும் நீரை ஆற்றில் விடுவதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீராலும் மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.