விழுப்புரம், ஜன.20- அரகண்டநல்லூர் பேரூ ராட்சி மக்களுக்கு பாது காப்பான குடிநீர் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் நகரச் செயலாளர் ஏ.ஆர்.கே.தமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், அரகண்டநல்லூர் நகரத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் பொது சுகா தாரத்தை பெஞ்சால் புயல், மழை வெள்ள பாதித்தது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் தூய நிறத்துடன் தண்ணீர் செல்லும் நிலையில், அரகண்ட நல்லூர் பேரூராட்சியில் மட்டும் குடிநீர் மஞ்சளாக வழங்கப்படுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே, புயல்,மழை வெள்ள பாதிப்பை முன்னிட்டு தற்காலிகமாக போடப்பட்ட போரில் இருந்து குடிநீர் வழங்குவதை உடனடியாக நிறுத்தி 2.0 திட்டத்தில் போடப் பட்டு தயார் நிலையில் உள்ள கிணறு மற்றும் பைப் ஒயர் லைனில் இருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்னர் வழக்கம் போல் குடிநீர் வழங்கிய கிணற்றில் ஏற்பட்டுள்ள குழாய் பைப் உடைப்பை சரி செய்து, திருடு போனதாக சொல்லப் படும் ஒயர்களுக்கு பதில், இணைப்பு வயர்கள் அமைத்து வழக்கம்போல் தினம் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2.0 திட்டப் பணிகளை உடனடியாக முழுமைப் படுத்தி, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும் பங்களுக்கு நிபந்தனை இன்றி, பாதுகாக்கப்பட்ட குடிநீரை தினமும் வழங்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரி வித்துள்ளார்.