சிதம்பரம், செப்.22- சிதம்பரம் பேருந்து நிலையத்திலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுற்றுலா நகரமான சிதம்பரம் பேருந்து நிலை யத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலை யம் முகப்பில் இரண்டு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டுள்ளது. இந்த கடை களில் எந்த நேரமும் மது பானம் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த கடைகளுக்கு வரும் நபர்களால் பேருந்து நிலையத்திற்கு வெளியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் குடிப்பவர்கள் மக்களுக்கு பெரிதும் இடையூறு செய்கி றார்கள். ஆபாசமாக நடந்துகொள்கிறார்கள். ஒரு சிலர் ஆடையின்றி சாலையிலேயே விழுந்து கிடக்கின்றனர். இத னால் குமரன் தெரு, கொத்தங்குடி, அண்ணா, கோவிந்தசாமி தெருக்கள், காந்திநகர், மீதுகுடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதி களுக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவிகள் முகம் சுளித்து செல்லும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை யும் புகார் செய்தும் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் சிதம் பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நகர் மன்ற துணைத் தலைவர் முத்து, அமுதா, மல்லிகா, ஜின்னா ஆகி யோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், வருகிற அக்டோ பர் 4 ஆம் தேதிக்குள் பேருந்து நிலையத்தின் முகப்பில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும். தவறி னால், மக்களை திரட்டி முற்றுகையிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.