விழுப்புரம், மார்ச் 9- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நடைபயிற்சி மைதானத்தில், கடந்த ஒரு வாரமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடை பெற்று வந்தது. அங்கு அமைக்கப் பட்டி ருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை தினந்தோறும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் சே.ஷீலா தேவி சேரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.