சென்னை, ஆக். 3- கொளத்தூர் தொகுதி யில் உள்ள கவுதமபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி வீடுகளை உடனடியாக பயனாளிக ளுக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள் ளது. தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொளத்தூர் தொகுதிக் குட்பட்ட கவுதம புரத்தில் பழு தடைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை புதிதாக கட்டி 18 மாதத்தில் அம்மக்க ளுக்கு வழங்கப்படும் என்று கூறியதை நம்பி அங்கு குடியிருந்த 400 குடும்பங்க ளும் வீட்டை காலி செய்து தந்தனர். தற்போது 4 ஆண்டு கள் முடிவடையும் தருவா யில் உள்ளது. குடியிருப்பு கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்று வரை அவர்களுக்கு வீடு ஒதுக்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலை யில் கட்டி முடிக்கப்பட்ட வீடு களை உடனடியாக பயனாளி களிடம் ஒப்படைக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பாதிக்கப்பட்டோர் புதனன்று (ஆக. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன் பேசுகையில், “கடந்த ஆட்சியாளர்கள் இந்த வீடு கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்துடன் இணைத்தால், பயனாளிகள் 1,50,000 ரூபாய் கட்டினால்தான் வீடு என்று கூறியபோது, இந்த 400 குடும்பங்களும் பீடி சுத்தும் தொழிலாளர்கள், வீட்டு வேலை மற்றும் முறைசாரா தொழிலாளர்கள். இவர்க ளால் அந்த பெரும் தொகையை செலுத்த இயலாத சூழல் உள்ளது. எனவே இந்தத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதன் விளை வாக குறைக்கப்பட்டது” என்றார். 18 மாதத்தில் வீடுகளை ஒப்படைப்போம் என்று உறுதியளித்த அரசு தற்போது 4 ஆண்டு நிறை வடைந்தும் வழங்கப்படாத தால் அவர்கள் வாடகை கூட செலுத்த முடியாமல் பொருளாதார நெருக்கடி யில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே அரசு உடனடியாக குடியிருப்புகளை அந்த பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் பொது மக்களை ஒருங்கிணைத்து வீடுகளை ஒப்படைக்கும் வரை காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபடுவோம் என தலைவர்கள் பேசினர். பகுதிக்குழு உறுப்பினர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயரா மன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, முன்னாள் பகுதி செயலாளர் கோட்டீ ஸ்வரன் ஆகியோர் பேசி னர்.