சிதம்பரம் சி. வக்காரமாரியிலுள்ள வீனஸ் சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் சேர்மன் எஸ். குமார், இயக்குநர் மருத்துவர் கே.முரளி குமார், முதல்வர் எஸ். ராதிகா, மேலாளர் கே.ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கிருஸ்துவ கலாச்சார குடில், கிறிஸ்துமஸ் ஒளிரும் மரம் அமைக்கப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
