சிதம்பரம், மே 12- சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது மாணவர்கள் போராட்டம் ஓய்ந்த நிலையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரியை மே 12 ஆம் தேதியி லிருந்து மீண்டும் திறக்க அண்ணா மலை பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.