விழுப்புரம், பிப். 20- விழுப்புரம் மாவட்டம், காணையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இல்லம் தேடி உளுந்து விதைகள் வேளாண் துணை இயக்குநர் வழங்கினார். விழுப்புரம் மாவட்ட வேளாண் உழவர் நலத்துறை சார்பில் நெல் அறு வடைக்குப் பின் பயறு வகை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் உளுந்து சாகுபடி செய்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காணை ஒன்றியத்துக் குட்பட்ட வெண்மணியாத்துர், சித்தேரி யில் வேளாண் அலுவலகம் சார்பில் இல்லம் தேடி மானியத்தில் விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் (திட்டம்) பெரியசாமி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சரவணன், துணை வேளாண் அலு வலர் செல்வம், உதவி வேளாண் அலு வலர்கள் பிரபாகரன், ரத்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.