tamilnadu

img

நோய் எதிர்ப்பு உளுந்து விதைகள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சீர்காழி, டிச.24- நாகை மாவட்டம் கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொள்ளிடம், எருக்கூர், முதலைமேடு, கடவாசல் ஆகிய வேளாண் விரி வாக்க மையங்களில் ஆடுதுறை-3, வம்பன்-6 ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உளுந்து விதைகள் தேவை யான அளவுக்கு இருப்பு வைக்கப் பட்டுள்ளன. இந்த உளுந்து விதைகளை  விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு வேண்டிய உளுந்து விதைகளை வாங்கி பயனடையலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.  நெற்பயிரில் பூச்சித் தாக்குதல்: கொள்ளிடம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், அளக்குடி, தண்டேசநல்லூர் உள்ளிட்ட இடங்களில் டி.ஏ.கே.எம் 134, சொர்ணா சப், ஆடுதுறை 38, திருச்சி-3, கோ.ஆர்.50 ஆகிய ரகங்களில் நெல் விதை பண்ணை கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்கு நர் சுப்பையன், உதவி விதைச் சான்று அலுவலர்கள் வேல்முருகன், தனசேகர், வேளாண் அலுவலர் விவேக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மகேந்திரப்பள்ளியில் உள்ள சம்பா நெற்பயிர் நடவு செய்துள்ள நெற்பயி ரில் தத்துப்பூச்சிகள் பரவலாகத் தென்படுவதை கண்டனர். இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கூறுகையில், தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள இரு சில கிராமங்களில் பச்சை தத்துப்பூச்சி தாக்குதல் இலேசாகத் தென்படுகிறது. இதன் அறிகுறிகள் இலையின் விளிம்பில் மேற்புறத்திலிருந்து கீழ்நோக்கி மஞ்சள் நிறமாக மாறி வரும் இது மஞ்சள் நோயை உண்டு பன்னக் கூடிய பச்சை தத்துப்பூச்சியின் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஆகும். அதிகம் பாதித்தால், பயிர் காய்ந்து போகும் நிலை உருவாகும் எனவே இந்த பச்சை தத்துப்பூச்சி தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த பிரபினா பாஸ் 50 இசி 400 மிலி அல்லது இமிடோ குளோபிட்-17.8 எஸ்.எல் 50 மிலி அல்லது பிப்ரோலில்  5 சதம் எஸ்.சி 400 மிலி ஆகிய மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் தண்ணீரில் கலந்து பயிரில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார்.