சென்னை, ஏப். 13- ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மற்றும் மலைப் பிரதேசங்களிலும், மாஹே மற்றும் கர்நாடகாவின் கடலொர மற்றும் தெற்கு பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப வளி மண்டல அளவில் தெற்கு தீபகற்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுழற்காற்று வீசுவதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மேற்கு தீபகற்ப பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யக்கூடும். மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா, சத்தீஸ்கர், கங்கை நதி பாயும் மேற்குவங்க பகுதிகள் மற்றும் ஒடிசாவில் அடுத்த 4-5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.