districts

img

சென்னை ஐஐடியில் நடைபெறும் சாதிய வன்முறை

சென்னை ஐஐடியில் நடைபெறும் சாதிய வன்முறை, இட ஒதுக்கீடு மீறல், மர்ம மரணங்கள் குறித்து உரிய விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயர்நீதிமன்றம் தாமாகமுன்வந்து விசாரணை நடத்த வலியுறுத்தியும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் டி.கோவிந்தன், ஜி.மோகனன், முத்திருப்பன், எம்.ரவி, வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.