districts

விழுப்புரத்தில் முக்கிய இடங்களில் கேமரா

விழுப்புரம், மார்ச் 10- விழுப்புரம் மாவட்டத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகை யில், “நிலுவையிலுள்ள வழக்கு களை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்ற வாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடு கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும்”என்றார். மாவட்டத்தில் அதிகளவில் குற்றங்கள் நடைபெறும் இடங்களில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஏற்கனவே அமைக்கப்படுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மணல் கொள்ளை நடக்காமல் தடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.