விழுப்புரம், டிச. 17- விழுப்புரத்தில் புத்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: விழுப்புரம் மாவட்டம், பரந்து விரிந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத் திலுள்ள கல்வியாளர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகக் கண்காட்சி நடத்தி வாசிப்பை பரவலாக்க வேண்டும். வாசிப்பை பரவலாக்குவதன் மூலம் அறிவார்ந்த சமூகத்தை வளர்த்தெடுக்கவும், முற்போக்கு கருத்துக்களை விதைக்க வும் முடியும். வாசிப்பை தூண்டுவதன் மூலம் இளம் தலைமுறையினர் பண்பட்ட மனநிலையில் புத்தாக்க கருத்துக்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்க முடியும். புத்தகக் கண்காட்சியை மாண வர்கள் கண்டுகளிக்க கல்வித்துறை உதவியுடன் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பேருந்து, ரயில் தடங்கள் ஆகியவைகளின் முக்கிய மையமாகவும் விழுப்புரம் விளங்குவ தால் வாசிப்பாளர்கள் எளிதாக புத்தக கண்காட்சிக்கு வரும் சூழல் அமை யும். எனவே, மாவட்ட நிர்வாகம் பதிப்பாளர்கள், இந்த மாவட்டத்தில் உள்ள எழுத்தாளுமைகள், சமூக ஆர்வலர்களுடன் கலந்துபேசி புத்தக கண்காட்சியை நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.