சென்னை, டிச.23- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.கார்த்திஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் ரெஜிஷ் குமார், மாவட்டச் செயலாளர் சர வணதமிழன், பொருளாளர் மஞ்சுளா, நிர்வாகிகள் விஜி, நித்தியராஜ், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாவட்ட தலைவராக கே.எஸ்.கார்த்திஷ்குமார், செயலாள ராக சரவணதமிழன், பொருளாளராக முருகேசன் மற்றும் இதர நிர்வாகிகளாக ஸ்டாலின், தேன்மொழி, இசக்கி, பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்:-
சாலையோரம் குடியிருக்கும் உழைப்பாளி மக்களுக்கு வீடு மற்றும் வேலை வழங்க வேண்டும், கூவம், கொசஸ்தலை, அடையாறு ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும், ஆறுகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சென்னை நகர குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும், பள்ளி,கல்லூரி, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன.