tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

வேலூர், செப்.22- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 14-வது மாநாடு சத்து வாச்சாரியில் மாவட்டத் தலைவர் க.சரவணராஜ் தலைமையில் நடை பெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் ஜெயசீலன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். இணைச் செயலா ளர் செந்தில்குமார் வர வேற்றார்.  அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் எஸ்.ஏ.ராஜசேகரன் வேலை அறிக்கை சமர்ப்பி த்தார். பொருளாளர் மோகன மூர்த்தி நிதிலை அறிக்கையை வாசித்தார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மாநிலப் பொரு ளாளர் எம்.தங்கராஜ் நிறைவு ரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் செ.வெங்கடாசலம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியங்களை ஒழித்து முறையான கால முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசு வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்ததையொட்டி ராணி ப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டக்குழுக் களை உருவாக்க தலா 7 பேர் கொண்ட அமைப்புக்குழு உருவாக்குவது என மாநாட்டில் முடிவுசெய்ய ப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் 
மாவட்டத் தலைவராக க.சரவணராஜ், செயலாளராக மோ.ஜெயசீலன், பொருளாளராக  செந்தில்குமார்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.