தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசங்கீதன் மொழிப்பெயர்ப்பில் ஐஜாஸ் அகமதுவின் ‘மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது. இந்த நூலை திங்களன்று சென்னை புத்தகக்காட்சி அரங்கில் இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட, சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பெற்றுக் கொண்டார். கவிஞர் யுகபாரதி, கவிஞர் வெயில், பேரா.ஹாஜாகனி, பாரதி புத்தகாலய பதிப்பாசிரியர் ப.கு.ராஜன், மேலாளர் சிராஜூதீன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.