கண்டமங்கலம், பிப். 21- பண்ணக்குப்பம் வனத்தாம்பாளையம் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பண்ணக்குப்பம், வனத்தம் பாளையம், ஆழியூர் ஆகிய கிராமத்தில் உள்ள ஊரல் குளம் மற்றும் நீர்நிலை பகுதி களில் 200க்கும் மேற்பட்ட மயில்கள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் அங்கு உள்ள நீர்நிலைகளை தேடி வந்து வாழ்ந்து வருகின்றன. தற்போது மாமல்லபுரம் - புதுச்சேரி வழியாக தென் மாவட்டங்களை இணைக் கும் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதனால் மான்கள், மயில்கள் மற்றும் பறவை இனங்கள் தண்ணீ ருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படும், மேலும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியை சாலை விரிவாக்க அதிகாரிகள் பார்வையிட்டு அரசுக்கு உடன டியாக தெரிவித்து சாலையை மாற்று வழியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விலங்கு ஆர்வலர்கள், பறவைகள் பாது காப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள் ளனர்.
மேலும் இந்த கோரிக்கையை வலியு றுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், போக்கு வரத்து ஆணையர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மனுக்களை இப்பகுதி மக்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: புதிதாக சாலை அமைக்கும் பணிக்காக நீர்நிலைகள் நிறைந்த 12.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். போக்கு வரத்திற்கு சாலைகள் தேவை என்றாலும் விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு தன்மை மற்றும் அதன் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதனை உணர்ந்து உயர்நீதி மன்ற வழிகாட்டுதல்படி நான்கு வழிச் சாலை அருகில் உள்ள நிலப் பகுதி வழியாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த நீர்நிலைகளை விட்டு வெளியில் வந்த மான் குட்டி அவ்வழியாக சென்ற காரில் அடிபட்டு இறந்து போனது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசார ணை நடத்தி இந்த பகுதியை கண்காணித்து, பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பண்ணக்குப்பம்-வனத்தாம் பாளையம் இடையில் உள்ள ஏரியில் மான்கள் மற்றும் ஏராளமான மயில்களும் பல்வேறு வெளிநாட்டு பறவைகளும் தங்கி வாழ்ந்து வருவதால் இந்த ஏரியை பறவைகள் சரணா லயமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வ லர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளனர்.